×

கடைவீதியில் தண்ணீர் சூழ்ந்தது குளிர் காற்றுடன் கூடிய வானிலை மலை பிரதேச புத்துணர்வை அனுபவிக்கும் புதுகை மக்கள்

புதுக்கோட்டை, நவ.28: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பணி பெய்து வருவதால் ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் இருக்கும் குளிர் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மழையின்றி வறட்சி ஏற்பட்டு இருந்தது. இதனால் ஏரி, குளங்கள் வறண்டு விவசாயம் பொய்த்துப்போனது. மேலும் ஆண்டின் அனைத்த மாதங்களிலும் வரண்ட வாநிலையே காணப்பட்டது. இதனால் மக்கள் வெறுப்புடன் காணப்பட்டனர். வயல்களுக்கு சென்றாலும் பசுமை இல்லை. வீட்டில் இருந்தாலும் குளிர்ச்சியின்றி வறண்டு வாநிலை இருந்தது. இதனால் குளிர்சானங்களின் பயன்பாடு அதிகரித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது.இதனால் ஏரி, குளங்களில் தண்ணீர் பெருக தொடங்கியது. சுமார் 50 சதவீம் பெருகிய நிலையில் அதனை வைத்து விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுகளில் நடவுகள் வளர்ந்து கதிராக மாற தொடங்கிவிட்டது. இதனால் வயல்வெளிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. இது ஒரு புரம் இருக்க கடந்த சில வாரங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை முதல் மாலை வரை வெயில் இன்றி குளிர்ச்சியாக வாணிலை காணப்படுகிறது. குறிப்பாக மாலை முதல் காலை வரை குளிர தொடங்கிவிடுகிறது. இதனால் பெரியவர்கள், குழந்தைகள் சொட்டர் மாட்டிக்கொண்டுதான் வெளியே வருகின்றனர். மேலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை து£ரல் விழுகிறது. இதனால் சாலை ஓரங்களில் மரங்கள், செடிகள் அனைத்தும் பசுமையாக உள்ளது. ஊட்டி போன்ற மலை பிரேதங்களில் நிலும் வாணிலை மாவட்டத்தில காணப்படுவதால் மக்கள் ஒரு வித சந்தோஷசத்துடன் இந்த குளிர்ந்த வாணிலையை அனுபவித்து மகிழ்கின்றனர்.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்ல குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. தரிசு நிலங்கள், விளை நிலங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது. இதபோல் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள், செடிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும் போது சுவானயன உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாக காலை நேரங்களில் பயணிக்கும்போது தாங்கக்கூடிய குளிர் இருப்பதால் இதமாக இருக்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வாகனத்தில் சென்றால் குளிர்ச்சி ஏற்படுகிறது. நீண்ட நேரம் செல்ல முடியவில்லை. ஒரு சில நாட்கள் நல்ல பணி பெய்வதால் காலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. ஆனால் நாள் முழுவதும் வெயில் இன்றி குளிர் காற்று இருப்பதால் எந்தவித குளிர்சாதனங்களையும் பயன்படுத்துவது இல்லை. வியர்வை இன்றி நாட்கள் கழிப்பது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. ஊட்டி, மேகமலை போன்ற குளிர் பிரதேசத்தில் வாழ்கிறோம் என்ற உண்ர்வு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் கண்டிப்பாக சந்தோஷமாக இருக்கும். வரும் நாட்களில் கண்டிப்பாக வெயில் அதிகரிக்கும் என்று நினைத்தால் சற்று மனம் வேதனை ஏற்படுகிறது. என்றனர்.

Tags : mountain ,
× RELATED சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி