×

அங்கனூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மக்களுக்கு இலவச துணிபை வழங்கல்

அரியலூர், நவ. 28: செந்துறை அருகே தேசிய பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் காப்பது குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை தலைமையாசிரியர் குணசேகரன் துவக்கி வைத்தார்.பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் நிலங்களை பாதுகாப்போம், மரம் வளர்போம் மழை பெறுவோம், பசுமை எங்கோ வளமை அங்கே, துணிப்பை சணல் பைகளை பயண்படுத்துவோம், நெகிழி இல்லா சுற்றுச்சூழல் பாதுகாப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் விழிப்புணர்வு கோஷமிட்டவாறு சென்றனர்.பள்ளியில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.பேரணியின்போது அங்கனூர் கிராம புதியதோர் புவி செய்வோம் இளைஞர்கள் குழு சார்பில் இலவசமாக ஆசிரியர்கள், அலுவலர்கள், பேருந்து பயணிகள், பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கினர்.பேரணியில் தேசிய பசுமைப்படை ஆசிரியர் மணிகண்டன், ஆசிரியர்கள் மோகன், கார்த்திகேயன் மற்றும் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Anganur ,
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விறு விறுப்பான வாக்குப்பதிவு