நல்லியாம்பாளையம் பகுதியில் நாளை இலவச மருத்துவ முகாம்

கரூர், நவ.28: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் நாளை (வெள்ளி) நடமாடும் இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது.காலை 9மணிக்கு ஓனவாக்கால்மேடு தொடங்கி, தொடர்ந்து நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதூர், குறுக்குப்பாளையம் ஆகிய ஊர்களில் முகாம் நடக்கிறது. ஆலைடாக்டர்கள் இலவச மருத்துவ பரிசோதனை செய்து மருந்துமாத்திரைகளை வழங்க உள்ளதால் கிராம பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆலைநிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>