×

குடிமராமத்து பணியின்போது ஏரியில் பள்ளம் எடுத்து மண் விற்பனை கன ஜோர்

பள்ளிப்பட்டு, நவ. 28: . பள்ளிப்பட்டு அருகே கீச்சலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் ₹ 5 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஏரி ஆழப்படுத்தி மண் மூலம் கரை பலப்படுத்த வேண்டும். இதற்கு மாறாக ஏரி மண் டிராக்டர்களில் கடத்தி செங்கல் சூளைக்கு  ஒரு லோடு டிரக்டர் மண் ₹ 3 ஆயிரம் விதம் ஒப்பந்ததாரர் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதன்பேரில், நேற்று இரவு வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார்  பொதட்டூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் உமா கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்து  ஏரியில் மண் கடத்தி விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தினர்.

Tags : creek ,lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு