×

பெரும்புதூர் ஆர்டிஓ அலுவலக கட்டிட பணி

பெரும்புதூர், நவ.28: காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிதாக ஸ்ரீபெரும்புதூரில் ஆர்டிஓ அலுவலகம் துவங்கப்படுகிறது. இதற்கான கட்டிட பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். பெரும்புதூர் தாலுகாவில் பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  பெரும்புதூர் தாலுகாவில் பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.தற்போது பெரும்புதூர் தாலுகாவை பெரும்புதூர் தாலுகா, குன்றத்தூர் தாலுகா என பிரிக்கப்பட்டுள்ளது. 2 தாலுகாவுக்கு ஆர்டிஓ நியமிக்கப்பட உள்ளார்.இதைதொடர்ந்து, பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் குழு பயிற்சி கட்டிடத்தை ஆர்டிஓ அலுவலகமாக பயன்படுத்த திட்டமிட்டு, அதற்கான கட்டிட சீரமைப்பு பணிகள் நடக்கின்றன.இந்நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, புதிய ஆர்டிஓ அலுவலக கட்டிட பணியை நேற்று ஆய்வு செய்தார்.

 அப்போது, ஆர்டிஓ அறை, ஊழியர்கள் அறை, கணினி அறை, கழிப்பறை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.உடன் சப் கலெக்டர் சரவணன், தாசில்தார் ரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசுமதி, வேல்முருகன், மாத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் எறையூர் முனுசாமி, எடையார்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் மூர்த்தி ஆகியோர் இருந்தனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு