×

நெல் சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்க ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

மன்னார்குடி, நவ.28: நீடா வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் பேரளத்தில் விவசாயிகளுக்கான நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை பயிற்சி முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் நெற்பயிர் சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு தொழில் நுட்பங்களைப் பின்பற்றுதல் குறித்த ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி பேரளம் கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் உத்திராபதி தலைமை வகித்து பேசுகையில், வேளாண்மைத் துறையின் வாயிலாக விவசாயிகளுக்கு செயல படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும், நெற்பயிரில் உற்பத்தி செலவைக் குறைக்கும் வழிமுறைகளான குறைந்த விதையளவு, கோனோ வீடர் களைக் கருவியைக் கொண்டு களைகளையே உரமாக்கி ரசாயன உர பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட வழிமுறைகளை விவசாயிகளிடம் எளிமையாக விளக்கி கூறினார்.நீடா வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், விவசாயிகள் குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் இடுபொருட்களை குறைவான செலவில் வாங்க முடிவதோடு விளைபொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராஜா ரமேஷ் பேசுகையில், நெற்பயிர்களை பூச்சி மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளான உயிரியல் முறையில் முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக் கோகர்மா ஜப்பானிக்கம், டிரைக்கோ கர்மா கைலோனிஸ் வெளியிடும் முறைகள், மஞ்சள் ஒட்டும் அட்டைப்பொறி, இனக்கவர்ச்சி பொறி, வேம்பு உள்ளிட்ட தாவர பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துதல் குறித்து எடுத்துரைத்து இயற்கை முறை யிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு விளக்கங் களுடன் அறிவுறுத்தினார். மேலும் தண்ணீரை குறைவாக பயன்படுத்தி சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசன வழங்கினார். இந்த பயிற்சியல் இனக்கவர்ச்சி பொறி மற்றும் முட்டை ஒட்டுண்ணிகள் பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.இதில் இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு சூடோமோனாஸ் எதிர் உயிர் கொல்லி மருந்து, வரப்பில் விதைப்பதற்கு சூரியகாந்தி விதைகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் சிங்காரவேல், மணிகண்டன், சேகர் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லட்சுமி காந்தன் வர வேற்றார். வட்டார வேளாண்மை துணை அலுவலர் சின்னப்பன் நன்றி கூறினார்.விவசாயிகள் பங்கேற்று பயன் பெற்றனர்

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...