×

கலெக்டர் கேட்டறிந்தார் இரு தரப்பு மோதல் சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, நவ.28: மன்னார்குடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்ககோரி கோட்டூர் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் காவல் சரகத் திற்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்த மான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகநாத சுவாமி,  தேவி, பூதேவி மற்றும் சாஸ்தா வீரப்பன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் சுவாமி ஊர்வலம் தொடர்பாக இரு சமூகத்தினரிடையே நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்தது. திருவிழா காலங்களில் சுவாமி ஊர்வலம் ஒரு சமூகத்தினர் வசிக்கும் தெரு வழியாக செல்வதற்கு மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மோதல் சூழல் நிலவி வந்தது. இது தொடர்பாக கடந்த தீபாவளியன்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 8 பேரும், மற்றொரு தரப்பினரும் காயமடைந்தனர்.மன்னார்குடி ஆர்டிஓ தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கோயி லின் பிரகாரத்திற்குள்ளேயே ஊர்வலம் நடத்த பட வேண்டும். எக்காரணம் கொண்டும் மறு உத்தரவு வரும் வரையில் கிராமத்தில் எந்த தெருவுக்குள்ளும் சுவாமி ஊர்வலம் செல்ல கூடாது. மேலும் இரு தரப்பினரும் தங்களுக்குள் பேசி அதில் முடிவு எட்டப்பட்ட பின்னர் இரு சேர்ந்து அனுமதி கோரினால் சுவாமி ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது குறி த்து பரிசீலிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு சுவாமி ஊர்வலம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள பொது வளங்களான நீர்வளம், மராமத்து போன்றவற்றில் சம உரிமை அளிக்க வேண்டும், மோதலில் படுகாயமடைந்த மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், மனை பட்டா இல்லாதவர்களுக்கு மனை பட்டா வழங்குவதுடன் வீடுகள் கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கோட்டூர் அருகே கம்பன் குடி ஆர்ச் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் வாசகன் தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிர்வாகி டாக்டர் பாரதிச்செல்வன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் புரட்சி கழக பொதுச்செயலாளர் அரங்க குணசேகரன், போராட் டக்குழு ஒருங்கிணைப்பாளர் தங்க தமிழ்வேந்தன், விடுதலை சிறுத்தைகள் மாநில துணைச்செயலாளர் ரமணி, வழக்கறிஞர் கந்தசாமி உள்ளிட்டோர் பேசினர்.சசிக்குமார் வரவேற்றார். கிராம கமிட்டி செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பழனிச்சாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Collector ,clash ,victims ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...