×

திருவாரூரில் நாளை தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

திருவாரூர், நவ.28: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நாளை நடைபெறுவதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசின் திட்டங்கள் மூலமாக மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும் சலுகைகள், மானியங்கள் , வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் மற்றும் கடன் திட்டங்கள் புதிய தொழில் தொடங்குவது போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதற்கான முகாம் நாளை (29ம் தேதி) திருவாரூரில் நடைபெறுகிறது.பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டல் செல்வீசில் நடைபெறும் இந்த முகாமில் அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஏற்கனவே பயனடைந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்க உள்ளனர். மேலும் இந்த விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சியில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு உரிய ஆலோசனைகளும் வழங்கப்படும். இதுமட்டுமின்றி தொழில் முனைவோர்களின் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்களுக்கு உதவி அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். எனவே மாவட்டத்தில் தகுதியும் விருப்பமும் உள்ள சிறு ,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் புதிய தொழில் துவங்கவுள்ளவர்கள் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Tags : Entrepreneurship Awareness Camp ,Thiruvarur ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் குற்ற...