×

முத்துப்பேட்டை அரசு பள்ளியில் காந்தியின் 150ம் ஆண்டு பிறந்தநாள் விழா கருத்தரங்கம்

முத்துப்பேட்டை, நவ.28: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காந்தியின் 150ம் ஆண்டு பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. உதவி தலைமையாசிரியர் சதீஸ்குமார் தலைமை வகித்தார். இலக்கிய மன்ற தலைவர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முன்னாள் மாணவர் திருவாரூர் கல்லூரி பேராசிரியர் வெங்கட்ராஜீலு கலந்துகொண்டு பேசினார். இதில் காந்தியடிகளும், இயற்கை மருத்துவமும், ரெடிமேடாக கிடைத்த குமரப்பா, கிராம சுயராஜ்ஜியமும் ஒரு உலகத்தீர்வு, காந்தியடிகள் கண்ட ராம்ராஜ்யம் என்ற ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் பேசினர். இதில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், காந்தி பற்றிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இலக்கிய மன்றம் சார்பில் பள்ளிக்கு காந்தியின் உருவ படமும், அங்குள்ள நூலகத்திற்கு காந்தி பற்றிய புத்தகங்களும் வழங்கப்பட்டது. இதில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவி.ரெங்கசாமி, தமுஎச செயலாளர் செல்லதுரை, வெற்றி தமிழர் பேரவை தலைவர் சுபசிதம்பரம், மூத்தகுடிமக்கள் இயக்கத்தை சேர்ந்த ஆறுமுகம், ஆசிரியர்கள் செந்தில்குமார், ராஜாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Gandhi ,Muthupettai Government School ,
× RELATED திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் இன்று மாலை முதல் துவங்கும்