×

வடரெங்கம் ஜம்புகேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

கொள்ளிடம், நவ.28: கொள்ளிடம் அருகே வடரெங்கம் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் இரண்டாவது சோமாவாரத்தை முன்னிட்டு 108 சங்கு அலங்காரம் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு ஜம்புகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை அய்யர் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 108 சங்குகள் மூலம் எடுத்து வரப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் 108 சங்குகளை கொண்டு சங்கு போன்று அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் சார்பில் கோயில் அர்ச்சகர் ரமேஷ் அய்யர் செய்திருந்தார்.

Tags : Vadarengam Jambukeswarar Temple ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...