வீதிக்கு வந்த குடும்ப தகராறு டிராபிக் கான்ஸ்டபிளை நடுரோட்டில் புரட்டி எடுத்த ‘பாசக்கார’ மனைவி

* திட்டியதை படம் எடுத்த கணவருக்கு பாடம் எடுத்த மனைவி * சாந்தோம் சிக்னலில் பரபரப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவலராக லெஸ்லிராஜ் பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது மனைவி கிளாடியஸ்க்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு லெஸ்லிராஜ் சாந்தோம் சிக்னலில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மனைவி கிளாடியஸ் அங்கு வந்து டிராபிக் பணியில் இருந்த லெலிஸ்ராஜ் குறித்து தரக்குறைவான வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டார். உடனே, லெஸ்லிராஜ் தன்னுடைய செல்போனில் மனைவி பேசியதை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, பொதுமக்கள் முன்னிலையில் கணவர் என்றும் பாராமல் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். பதிலுக்கு போக்குவரத்து காவலரும் மனைவியை தாக்கியுள்ளார்.

இதனால் மூன்று பக்கமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டு உருண்டனர். இதில் போக்குவரத்து காவலரின் சீருடை கிழிந்து தொங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் இருவரையும் விலக்கி விட்டனர். பின்னர் போக்குவரத்து காவலர் லெஸ்லிராஜ் மயிலாப்பூர் காவல்நிலையத்தில், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக அவரது மனைவி கிளாடியஸ் மீது புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>