×

ரேலியா அணை நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சி

குன்னூர், நவ.27:  குன்னூர் பகுதியில் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது.இந்த அணையின் மூலம் குன்னூர் பகுதியில் உள்ள 30 வார்டுகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நகராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்து வந்தது. இதனால் குன்னூர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் விடுதிகளில் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி பயண்படுத்தி வந்தனர். ஆனால் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து மழை அதிகளவில் பெய்ததால் இந்த அணை 5வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கடந்த 63 நாட்களாக அணை நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் தற்போது  இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குன்னூர் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Raleigh Dam ,
× RELATED கைகாட்டி பகுதியில் குரங்குகள் தொல்லை