×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குளம், கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

ஊட்டி, நவ. 27: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குளம், கால்வாய் தூர்வாரும் பணி துவங்கியுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ஜப்பான் பூங்காவில்  தண்ணீருக்கு நடுவே  பூங்கா அமைக்கப்பட்டது.இப்பூங்காக்களின் நடுவே சென்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொள்வது, ஓய்வு எடுப்பது போன்று செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நீலகிரியில் பெய்து வரும் மழையால், அனைத்து நீரோடைகள் மற்றும் குளங்களில் மழை நீரால் அடித்து வரப்பட்ட மண் குவியல்கள் தேங்கியுள்ளன.

ஜப்பான் பூங்கா குளங்கள் மற்றும் இதர இளங்களிலும் மண் நிறைந்து காணப்பட்டது. இதனால், மழை பெய்தால், குளங்களில் இருந்து வெளிேயறும் தண்ணீர் சில சமயங்களில் பூங்காக்களில் சாலை, புல் மைதானம் ஆகிய பகுதிகளுக்கும் வந்து விடுகிறது.இதனால், பூங்காவில் உள்ள குளங்களில் தற்போது தூர் வாரும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்காவில் உள்ள ஜப்பான் பூங்காவை சுற்றிலும் உள்ள குளங்கள், மழை நீர் செல்லும் கால்வாய்கள் ஆகியவைகளும் தூர் வாரப்படுகிறது.  மேலும், நுழைவு வாயில் பகுதியில் உள்ள குளங்களிலும் உள்ள அல்லிச் செடிகள் அகற்றப்பட்டு தூர் வாரும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.


Tags : canal ,Ooty Botanic Gardens ,pond ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...