உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக, அமமுகவினர் விருப்பமனு அளிப்பு

சாயல்குடி, நவ. 27: சாயல்குடி பகுதியில் திமுக, அமமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அக்கட்சியினர் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 25 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 2 மாவட்ட வார்டுகள் உள்ளன. சாயல்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் அக்கட்சியினர், விருப்பமனுவை பெறும் பொறுப்பாளர்கள் பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ திசைவீரன், வக்கீல் முகம்மதுமுத்தார் ஆகியோரிடம் விரும்ப மனுகளை அளித்தனர். சாயல்குடி ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், வள்ளக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரண்மனைச்சாமி உள்ளிட்ட திமுகவினர் விருப்ப மனு அளித்தனர். அமமுக சார்பில் ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி குழு வார்டு, சாயல்குடி பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்பும் அக்கட்சியினர் ஒன்றிய செயலாளர் பச்சகண்ணுவிடம் விருப்ப மனு அளித்தனர். கடலாடி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் அமமுக ஒன்றிய செயலாளர் பத்மநாதனிடம் விரும்பமனு அளித்தனர்.

Tags : DMK ,AIADMK ,elections ,government ,
× RELATED 30ம் தேதி வாடிப்பட்டி ஒன்றிய தலைவர்...