×

ஆழ்குழாய் கிணறு மூடாமல் இருந்தால் நடவடிக்கை

கோபி, நவ.27: பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறு மூடப்படாமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் கூறினார். கோபி அருகே உள்ள சாணார்பாளையம், பொம்மநாய்க்கன்பாளையம், பொலவக்காளிபாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமம் மற்றும் குக்கிராமங்களில் ரூ.3.50 கோடி மதிப்பிலான தார்ச்சாலை அமைக்கும் பணியை அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில்,`அந்தியூர் தொகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை மூடவும், மூடி போடவும் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கிணறுகளுக்கு மூடி இல்லாமல் இருப்பது குறித்து கவனத்திற்கு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


Tags : tube well ,
× RELATED பயனற்று கிடக்கும் 77 ஆழ்குழாய் கிணறு மூடப்படுகிறது