நிலக்கோட்டையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு பயிற்சி

வத்தலக்குண்டு, நவ. 27: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பாக நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ஆத்தூர் ஒன்றியங்களுக்காக நடந்த பயிற்சி முகாமிற்கு நில மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் மலர்விழி, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ், குணவதி முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் சதீஸ்பாபு, உதவி ஆணையாளர் கமலக்கண்ணன் ஆகியோர் தேர்தல் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

முன்னதாக சட்டமேதை அம்பேத்கர் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், வேதா, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பணியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : Assistant Election Officer ,Nilakkottai ,
× RELATED 9 பேர் மீது வழக்குப்பதிவு மேலைச்சிவபுரியில் வாசியோகம் குறித்த பயிற்சி