ஹெல்மெட் விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரம், நவ. 27: ஒட்டன்சத்திரத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பஸ்நிலையம் முன்பு நடந்த முகாமிற்கு போக்குவரத்து சார்பு ஆய்வாளர் நல்லசாமி தலைமை வகித்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்து கூறினார். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், செல்போன் பேசி கொண்டு வாகனங்களை இயக்க கூடாது, காரில் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். இதில் போக்குவரத்து காவலர்கள் சூரியா, தாமரைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி