×

திண்டுக்கல் மக்காச்சோள உற்பத்தியாளர் மூலம் ரூ.66 லட்சத்தில் அரவை மில்

பழநி, நவ. 27: திண்டுக்கல் மாவட்ட மக்காச்சோள உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் விவசாயிகளால் ரூபாய் 66 லட்சத்தில் அரவை மில் அமைக்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதிகளில் மக்காச்சோளம் மற்றும் சோள வகைகள் அதிகளவு பயிரிடப்பட்டு வருகின்றன. மதுரை களஞ்சியம் தொழிலகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட மக்காச்சோளம் மற்றும் சோள உற்பத்தியாளர் நிறுவனம் எனும் பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு 1000 விவசாயிகள் ஒருங்கிணைப்பட்டனர். இவர்களில் தலா 20 பேரை பிரித்து ஒரு குழுவாக மாற்றி வேளாண் வணிகத்தில் ஈடுபட வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2015ம் ஆண்டில் இந்நிறுவனம் துவங்கப்பட்U விவசாயிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கும் விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரங்கள், சொட்டுநீர்பாசனங்கள் அமைத்தல், மானவாரி மேம்பாட்டுத் திட்டங்களின் படி கூட்டுப்பண்ணை அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் குழுக்கடன் பெறும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளால் விளைவிக்கப்படும் மக்காச்சோளம் நல்ல விலைக்கு நிறுவனத்தினாலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மாநில அரசின் திட்டங்களை பெறும் வகையில் 1 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதில் அரசின் நிதி உதவியுடன் ரூபாய் 66 லட்சத்தில் அரவை ஆலை அமைக்கப்பட உள்ளது. மக்காச்சோளம் அரைத்தல், அரவை செக்கு எண்ணை உருவாக்குதல், குடோன் போன்றவை அமைக்கப்பட உள்ளது. மேலும், நிறுவனத்தில் உறுப்பினராக விவசாயிகளின் பெயரில் மத்திய அரசின் பங்கு ஈவுத்தொகையாக ரூபாய் 10 லட்சம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் நிறுவனத்தின் உதவி முதன்மை செயல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Aravana Mill ,maize producer ,Dindigul ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்