×

மாவட்ட அறிவியல் கண்காட்சியில் சாதனை பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

காடையாம்பட்டி, நவ.27: மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்ற பண்ணப்பட்டி  அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பண்ணப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் சாலையில் வேகத்தடையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையில்லாமல் செல்வதற்கான சிறப்பு கண்டுபிடிப்புக்காக வெளிநாடு சுற்றுலா சென்று வந்தார்.

இந்நிலையில், சேலத்தில் தியாகராஜர் பல்தொழில்நுட்ப கல்லூரி நடத்திய மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் 22 பேர் கலந்து கொண்டனர். மேலும், இந்த போட்டியில் 7 மாவட்டங்களில் இருந்து ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு 600 படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர்களின் இரண்டு குழுவிற்கு பரிசு கிடைத்தது. இதில், மாணவர்கள் ஜோசப் நாதன், மணிரத்தினம் ஆகிய இருவரும் குறும்பட பிரிவில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து வெற்றிபெற்றனர். இவர்கள் மாணவ சமுதாயம் மது மற்றும் போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குறும்படம் உருவாக்கியிருந்தனர். இதன் மூலம் ₹3000 பரிசு தொகையும், கோப்பை மற்றும் சான்றுகளையும் பெற்றனர்.

இதேபோல், சுற்றுச்சூழல் தலைப்பிலான பிரிவில் சர்மிளா, நர்மதா, கலையரசி, இந்துமதி ஆகிய நான்கு மாணவிகளும் தற்சார்பு வீடு அமைத்திருந்தனர். அந்த வீடு முழுக்க முழுக்க இயற்கையாகவும், சுற்றுச்சூழல் வீடாகவும் அமைத்திருந்தனர். இந்த படைப்புக்கு 3ம் பரிசு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன், உதவித் தலைமை ஆசிரியர்கள் லாவண்யா, சித்ராதேவி, ஹெலன் விக்டோரியா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பரமேஸ்வரன், தொழிற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் லாவண்யா, முதுகலை ஆசிரியை கீர்த்தனா, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் விஜிலா ஆகியோர் மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்இளம்பிள்ளை, நவ.27: சேலம் அருகே உள்ள வைகுந்தம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் போனஸ் கேட்டும், சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டோல்கேட் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் அமைப்பின் மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை வகித்து பேசினார். அவர்களிடம் சேலம் டோல்வேஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணியாளர்களின் கோரிக்கை மீது வரும் டிசம்பர் 5ம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என உறுதி கூறினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : District Science Exhibition ,
× RELATED மாவட்ட அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்