நாமக்கல் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு வினாடி-வினா போட்டி

நாமக்கல், நவ.27: நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான வினாடி,வினா போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாமக்கல் கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற, நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செவந்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணிகளும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில், வெற்றிபெற்ற கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகளும் கலந்து கொண்டன. போட்டியை முதன்மை கல்வி அலுவலர் உஷா துவக்கி வைத்தார். இதில் செவந்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி வெற்றிபெற்றது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள மாணவ, மாணவியர்  திருச்சியில் நடைபெற உள்ள மண்டல போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

Related Stories: