எலச்சிபாளையம் ஒன்றியத்தில் சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

திருச்செங்கோடு, நவ.27: எலச்சிபாளயம் ஒன்றியத்தில், சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கிழக்கு புத்தூர் கிராமத்தில், சுமார் 25 ஆண்டுகளுக்கு  முன், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. பின்னர் கடந்த 2013ம் ஆண்டு ஊரக கட்டிடங்கள் மேம்பாட்டு நிதி ₹37 ஆயிரத்தில் தொட்டியை புதுப்பித்தனர். தற்போது வரை  பயன்பாட்டில் உள்ள தொட்டியில், ஆங்காங்கே பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

இதில் தூண்கள் வலுவிழந்து கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இடிந்து விழுமோ என்ற அச்சத்தில், பொதுமக்கள் இருந்து வருகின்றனர். மேலும், தொட்டியின் அருகில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு மேல்நிலைத்தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: