×

போச்சம்பள்ளியில் வைக்கோல் லோடு ₹5,000க்கு விற்பனை

போச்சம்பள்ளி, நவ.27: காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. இதனால் ஒரு லோடு வைக்கோல், ₹5 ஆயிரத்துக்கு விற்கப்படுவதால், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில், கடந்தாண்டு வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று, ஒரு லாரி லோடு வைக்கோலை ₹12 ஆயிரம் முதல், ₹15 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். இந்த நிலையில், நடப்பாண்டு தென்பெண்ணை ஆற்று நீர் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல்  நெல் சாகுபடி செய்துள்ளனர்.

இதனால், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை வாங்க நெல் அறுவடை நடந்து வரும் காவேரிப்பட்டணம், நெடுங்கல், திம்மாபுரம், மலையாண்டள்ளி, வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இங்கு ஒரு லாரி லோடு வைக்கோல் ₹5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
நடப்பாண்டு வைக்கோல் விலை பல மடங்கு குறைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் லாரி, லாரியாக வைக்கோலை வாங்கி செல்கின்றனர்.

Tags : Straw ,Bochampalli ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...