×

இளம் படைப்பாளர் விருதுக்கு அரசு பள்ளி மாணவி தேர்வு

ஓசூர், நவ.27: ஓசூர் பேடரப்பள்ளி அரசு பள்ளி மாணவி, இளம் படைப்பாளர் விருதிற்கு தேர்வாகியுள்ளார். அவரை ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர். ஓசூர் வட்டார அளவில் இளம் படைப்பாளர் விருதிற்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள், ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் நடந்த 2ம் கட்ட போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட 10 ஒன்றியங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் ‘என் எதிர்காலம் என் கையில்’ என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியில், பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி அர்ச்சனா பங்கேற்று 2ம் இடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவிக்கு நேற்று பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பொன் நாகேஷ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில், கிராம கல்விக்குழு தலைவர் நாராயணரெட்டி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லக்கப்பா, நூலகர் கல்பனா, ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவியை பாராட்டினர். மேலும், மாணவிக்கு பயிற்சியளித்த ஆசிரியர் மேரி ஹேமாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags :
× RELATED மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி