×

பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினரிடையே போட்டா போட்டி இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.27: இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தை திருச்சி மாவட்டததில் அமல்படுத்த வேண்டும். ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் அனைவருக்கும் குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.

அரசாணை எண் 318ன்படி கோயில் மடங்களுக்கு சொந்தமான இடத்தில் சாகுபடி செய்யும், குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் தர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்து சென்றனர்.

காவலரின் கருணை
முசிறி உதவி கோட்ட பொறியாளர் மனோகரன், தா.பேட்டை இளநிலை பொறியாளர் சுரேஷ்சந்திரன் ஆகியோர் தா.பேட்டையில் உள்ள புறவழிச்சாலை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வரவில்லை.
தா.பேட்டை செயல் அலுவலர் அசோகன் கூறுகையில், தா.பேட்டை புறவழிச் சாலையை நெடுஞ்சாலைத் துறைக்கு முறையாக எழுதி கொடுத்தாகிவிட்டது.
திருச்சி கலெக்டர் உடனடியாக தா.பேட்டை புறவழிச் சாலையை யார் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை அறிவுறுத்தி ஒரு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

Tags : demonstration ,Communist ,rivalry ,house ,highway department ,government ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு