×

கரூர் வெங்கமேடு மேம்பாலம் கீழ்புறம் ரயில் தண்டவாளத்தில் மலை போல் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்

கரூர், நவ. 27: கட்டிட கழிவு பொருட்களை ரயில்வே லைனில் மலைபோல குவித்துள்ளனர். கரூர் ஜங்ஷன் ரயில்நிலையத்தில் இருந்து வெங்கமேடு மேம்பாலத்தின்கீழ் புறம் ஈரோடு மற்றும் சேலம் ரயில்பாதை பிரிகிறது. இந்த இடத்தில் இருப்புப்பாதை அருகில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது. கட்டிட இடிபாடுகளை நகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இங்கு கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். இதனால் கட்டிட இடிபாடுகள் மலைபோல குவிந்து கிடக்கிறது.

நகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு கட்டிட இடிபாடுகளை கொட்டுவதற்கு உண்டான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் குறையாக இருக்கிறது. இனியாவது நெறிமுறைகளைப் பின்பற்றி குப்பை கழிவுகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறுவோருக்கு அபராதம் விதித்து இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Venkamedu Bridge ,
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது