×

புதுக்குளத்தில் ஒத்திகை அரிமளம், திருமயம் பகுதியில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ள கழுதை பால் விற்பனை அமோகம்

திருமயம்,நவ.27: அரிமளம், திருமயம் பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகமாக உள்ளது.கழுதை பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தோல் நோய்கள், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்ற கருத்து. இதனை பயன்படுத்தி கொண்ட கழுதை வளர்க்கும் வெளி மாவட்ட நபர்கள் சிலர் கழுதை கூட்டத்துடன் திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று ஒரு அளவுள்ள கழுதை பால் ரூ.50 என வினியோகம் செய்து வருகின்றனர். இதனை நம்பிய கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கழுதை பாலை வாங்கி குடித்து வருகின்றனர்.கழுதைகளை கிராம பகுதிக்கு கொண்டு, அங்கேயே பாலை கறந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது பற்றி ஆலங்குடியை சேர்ந்த அரசு மருத்துவரிடம் கேட்ட போது, கழுதை பாலில் மாட்டு பாலை விட கொழுப்பு குறைவாக உள்ளது. இதனால் இதனை அனைத்து வயதினரும் குடிக்கலாம். மேலும் கழுதை பால் குடிப்பதனால் பாலில் உள்ள புரோட்டின், இரும்பு சத்துக்கள், ரத்த அணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் பாக்டீரியகாக்களை அழிப்பதாக தெரிவித்தார். இதனால் ரத்த சோகை, அலர்ச்சி, வயிற்கு போக்கு உள்ளிட்ட நோய்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும் உடல் பொழிவு பெறுவதோடு,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இவை அனைத்தும் ஒரு நாள் குடிக்கும் கழுதை பாலால் நிகழாது என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து ஒன்றிரண்டு மாதம் கழுதை பால் குடிப்பதால் இந்நிகழ்வுகள் நடக்கலாம் என தெரிவித்ததோடு குழந்தைகளுக்கு தாய் பாலிலேயே போதுமானநோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுப்பதன் மூலம் பல நோய்களை தடுக்கலாம் என்று தெரிவித்தார்.

Tags : area ,Arimalam ,Thirumayam ,donkey milk sale ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...