×

15 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய மகன் பெற்றோர் நெகிழ்ச்சி

புதுக்கோட்டை, நவ.27: புதுக்கோட்டை மாவட்டம் அன்னாவசல் அருகே உள்ள ராப்பூசல் கிராமத்தை சேர்ந்தவர் ராசு(60). இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகன், ஒரு மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இரண்டாவது மகன் செந்தில்குமார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும்போது மாயமானார். இதனையடுத்து செந்தில்குமாரின் தந்தை ராசு மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் செந்தில்குமார் இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் அவர்களும் பல மாதங்கள் தேடியும் கிடைக்காததால் வேறு வழியின்றி விட்டுவிட்டனர். இந்நிலையில் நேற்று செந்தில்குமார் 15 ஆண்டுகள் கழித்து புதுக்கோட்டை மாவட்டம் அன்னாவசல் அருகே உள்ள ராப்பூசல் மேற்கத்தியாண் பண்ணையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.இதனையடுத்து செந்தில்குமாரின் தந்தை ராசு மற்றும் உறவினர்கள் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூர் பகுதியில் பணியாற்றியதாகவும் வீட்டிற்கு வர விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் தற்போது திருப்பூரில் வீடு கட்ட ஏற்பாடு செய்துள்ளார். அதற்கு அனுமதி பெற தேவையான ஆவணங்கள் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அவரின் படிப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுக்க வந்ததாக செந்தில்குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர். 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் செந்தில்குமார் வந்ததில் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே...