×

சோலார் மின்நிலைய ஒப்பந்த ஊழியர் கொலை வழக்கில் 4 பேர் கைது

நெய்வேலி, நவ. 27:  நெய்வேலி அருகே இருதரப்பு மோதலில் சோலார் மின்நிலைய ஒப்பந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.நெய்வேலி அருகே கொள்ளிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் பிரகாஷ் (24). இவர் நெய்வேலி என்எல்சி வளாகத்தில் உள்ள சோலார் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் தனது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ், கார்த்தி, ராஜதுரை ஆகியோருடன் 2ம் அனல்மின் நிலையம் அருகே உள்ள சாம்பல் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு தரப்புடன் ஏற்பட்ட மோதலில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி ஆதண்டார்கொல்லை பகுதியை சேர்ந்த சேகர் மகன் கார்த்தி (23), கொள்ளிருப்பு கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகன் ராஜதுரை (25), முத்துசாமி மகன் சதீஷ்குமார் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளிருப்பு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவபாலன் (23) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் கைது எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Solar power plant contractor ,murder ,
× RELATED மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது