×

மாணவியை கடத்திய கல்லூரி மாணவர் போக்சோவில் கைது


பண்ருட்டி, நவ. 27: உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் கிராமத்தை சேர்ந்த மாணவி பண்ருட்டி அருகே  வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள சித்தி வீட்டில் தங்கி ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவரும்,  உளுந்தூர்பேட்டை களமருதூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அபிஷேக் (19) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்று  வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது  சித்தி குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் அவரது  தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் மாணவியின் தந்தை பண்ருட்டி காவல்  நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வந்தனர். மேலும் சென்னை  உயர்நீதி மன்றத்தில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்றை  தாக்கல் செய்து இருந்தார். பண்ருட்டி போலீசாரும் பள்ளி மாணவியை தேடும்  பணியில் ஈடுபட்டு கண்டுபிடித்தனர். பின்னர் மருத்துவ  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குறைந்த வயதுள்ள பெண்ணை  ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதற்காக கல்லூரி மாணவர் அபிஷேக் போக்சோ   சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Tags : College student ,student ,
× RELATED நாகர்கோவில் அருகே லாரி - பைக் மோதல் கல்லூரி மாணவர் பலி