வீட்டுமனை பட்டா, உதவித்தொகை கோரி தாலுகா ஆபீசுக்கு திரண்டுவந்த மக்கள்

தென்காசி, நவ. 27:  தென்காசியில் இலவச வீட்டு
மனைப்  பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் தாலுகா அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தென்காசி  மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர்  தங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வரன்முறை பட்டா, முதியோர் உதவித்தொகை  வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தென்காசி தாலுகா அலுவலகத்திற்கு திரண்டுவந்த பொதுமக்கள், இதுகுறித்த கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டார குழு செயலாளர் அயூப்கான் தலைமையில் வட்டார குழு உறுப்பினர்கள் லெனின்குமார், கிருஷ்ணன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, வேல்முருகன், குருசாமி,  வள்ளிநாயகம், ராதாகிருஷ்ணன், ஆறுமுகம், கருப்பையா, தமிழ்செல்வன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கோரிக்கை  மனுக்கள் அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட  தாசில்தார் சண்முகம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.Tags : taluk office ,
× RELATED வேலை இல்லா இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்