×

மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம்

நெல்லை, நவ. 27:  பாவூர்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.  பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் பேசினர். 9ம் வகுப்பு மாணவிகள் ஆயிஷா ஷமிரா, மிர்ஷா வர்ஷினி, சாருமதி அரசியலமைப்பு சாசனத்தில் மூன்று முக்கிய உறுப்புகள் பற்றி பேசினர். 8ம் வகுப்பு மாணவிகள் கணேசலேகா, செல்வகவிதா அரசை நெறிப்படுத்தும் கொள்கைகள் பற்றியும், 7ம் வகுப்பு மாணவர்கள் ஜேப்ரின் ஷாம்ராஜ், ஜெயஷினி வாக்குரிமை பற்றியும் பேசினர். 6ம் வகுப்பு மாணவர்கள் மித்ரா, ரேணுகா அடிப்படை உரிமைகள் பற்றி பேசினர்.

 மாணவர்கள் மத்தியில் போட்டித்தேர்வு பயிற்சியாளர் ராஜா பேசுகையில், ‘‘இந்திய அரசியலமைப்பு சாசனம் இந்தியர் ஒவ்வொருவரின் வாழ்வுரிமையை வரையறுக்கிறது. நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும், நிர்வாகத் துறையும், சட்டமியற்றும் இந்திய ஜனநாயகத்தில் முக்கிய பங்காற்றுகின்றன என்றார். இதையொட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வினாக்களுக்கு மாணவர்கள் ஆர்வமுடன் பதில் அளித்தனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.




Tags : Students Quiz Competition Indian Constitution Day ,SMA Matric School ,
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது