ஆலங்குளம் அருகே தாத்தாவை வெட்டியபேரனுக்கு வலை

ஆலங்குளம்,நவ.27:  ஆலங்குளம் அருகே பணம் தரமறுத்த தாத்தாவை வெட்டிய பேரனை போலீசார் தேடிவருகின்றனர். ஆலங்குளம் அருகே மேலகரும்புளியூத்து ரை ஸ்மில் தெருவை சேர்ந்தவர் பால்துரை(73). இவருக்கு மூன்றுமகள்கள்உள்ளனர்.மூவருக்கு திருமணமாகிவிட்டது. நேற்று மதியம் வீட்டில் பால்துரை தூங்கிகொண்டிருந்தார். அப்போது திடீரென அங்குவந்த அவரதுபேரன்  சூசைஎன்பவர் பால்துரையை அரிவாளால்  வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். இதனைகண்ட அக்கம்பக்கத்தினர் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்தவந்த ஆலங்குளம் போலீசார் கை,தலை ஆகியஇடங்களில் வெட்டுபட்டு படுகாயமடைந்த பால்துரையை மீட்டு பாளை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணைநடத்தினர். விசாரணையில் மூத்தமகள் ஆரோக்கியமேரியின் மகன் பாளைமனக்காவலம்பிள்ளை நகரைசேர்ந்த துரைராஜ்என்றசூசை(27) தற்போது கரும்புளியூத்தில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். கடந்தசிலநாட்களுக்கு முன்னர்பால்துரை அவருக்கு சொந்தமானவீடு ஒன்றை விற்றார்.அதில் வந்தபணத்தில் பாதியைமூன்று மகள்களுக்கும்பகிர்ந்து கொடுத்துள்ளார்.ஆனால் சூசைதனக்கு மேலும்பணம்தர வேண்டும்என்று பால்துரையிடம் குடித்துவிட்டு  அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். இதனால்பால்துரையின் மீதுஆத்திரத்தில் இருந்த சூசை நேற்று  குடித்துவிட்டு வந்துவீட்டில் தூங்கிகொண்டிருந்த பால்துரையை சரமாரியாக வெட்டியுள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய சூசையை தேடிவருகின்றனர்.

Related Stories:

>