பாவூர்சத்திரம்சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

பாவூர்சத்திரம், நவ. 27:  பாவூர்சத்திரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர்  அருண்சுந்தர் தயாளன் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். சங்கரன்கோவில் சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர் நளினி வரவேற்றார். மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை சந்தித்து சிகிச்சை விவரங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். ஆய்வில்  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், டாக்டர்கள் கீர்த்தி, ஆனந்தராஜ், சுகாதார மேற்பார்வையாளர் அரிகரசுப்பிரமணியன், ஆய்வாளர்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து  கலெக்டர்  அருண்சுந்தர் தயாளன், கீழப்பாவூர் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories:

>