கூடங்குளத்தில் மறுசுழற்சி ஆலை அமைக்க எதிர்ப்பு வள்ளியூரில் உதயகுமார் பேட்டி

வள்ளியூர், நவ. 27:  கூடங்

குளத்தில் மறுசுழற்சி ஆலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் என அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் உதயகுமார் தெரிவித்தார். பாஸ்போர்ட் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் உதயகுமாரிடம் வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிஹரபிரசாத் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது  300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாக  நான் உள்ளிட்ட ஏராளமானோரின் பாஸ்போர்ட்கள்  முடக்கிவைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக யாருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. இதனிடையே எனது  வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தை நான் அணுகினேன். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிகரபிரசாத் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் விசாரணைக்கு ஆஜரான என்னிடம், இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகுமாறு ஏஎஸ்பி அறிவுறுத்தினார். இருப்பினும் இதுவிஷயத்தில் தமிழக அரசு உடனடியாக  தலையிட்டு எங்கள் மீது  போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். கூடங்குளத்தில் மறுசுழற்சி ஆலை அமைப்பதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்’’ என்றார்.

Related Stories:

>