×

தனித்திறன் மேம்பாட்டு போட்டி குற்றாலம் செய்யது பள்ளி மாணவர்கள் சாதனை

நெல்லை, நவ. 27:  துளிர் ஜந்தர்-மந்தர் வினாடி-வினா போட்டி ஜேபி கல்லூரியில் நடந்தது. பள்ளி மாணவர்களின் அறிவியல்  திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த இப்போட்டியில் இயல் அறிவியல், உயிரி அறிவியல், துளிர் ஜந்தர் மந்தர், வானவியல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலிருந்து முதல் சுற்று எழுத்து தேர்வு நடந்தது. பின்னர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு 2ம் சுற்றாக காணொலி காட்சி நடந்தது. இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பங்கேற்றன. உயர்நிலை பள்ளி பிரிவில் குற்றாலம் செய்யது பள்ளியின் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களான ஆனந்தராம், முஹம்மது சுஹைல், முஹம்மது ரேகான் 3வது பரிசும், மேல்நிலைப்பிரிவில் மாணவர்கள் தங்கராஜ், நித்திஷ், அப்துல்காதர் இம்ரான் 3வது பரிசும் பெற்றனர். நடுநிலைப்பள்ளி பிரிவில் மாணவர்கள் தெளபிக் ராமிஸ், அஜய் யோகேஷ் ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் பத்ஹுர் ரப்பானி, பள்ளிச் செயலாளர் நெய்னாமுகம்மது, பள்ளி முதல்வர் முகைதீன் அப்துல்காதர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப்பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை