ஏழாச்சேரி கிராமத்தில் மர்ம காய்ச்சல் பாதித்த 105 பேருக்கு சிகிச்சை சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

செய்யாறு, நவ.27: ஏழாச்சேரி கிராமத்தில் 30 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து சுகாதாரத்துறையினர் 105 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் சில வாரங்களாக டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் அப்பகுதி மக்கள், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து, காய்ச்சல் நீடித்ததால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செய்யாறு மற்றும் சென்னை அரசு மருத்துமனைகளில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இந்நிலையில் நேற்று செய்யாறு சுகாதார பணிகள் துணை இயக்குனர் வி.கோவிந்தன் தலைமையில் சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வன் முன்னிலையில் மருத்துவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.மேலும், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.கோபாலகிருஷ்ணன் தலைமையில் 105 சுகாதார பணியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் 75 பேர் சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் ஒட்டு மொத்த தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>