கலசபாக்கம், நவ.27: கலசபாக்கம் அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நடமாடும் மருத்துவக் குழுவினரை வட்டார மருத்துவ அலுவலர் பாராட்டினர்.கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவக்குழுவினர் கலசபாக்கம் அடுத்த பல்வேறு கிராமங்களில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் லாடவரம் கிராமத்தில் நடமாடும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்க வந்தனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஷீலா(23) பிரசவ வலியால் துடித்தார். தகவல் அறிந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக அவரை கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.