வேட்டவலம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
வேட்டவலம், அக்.27: வேட்டவலம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு (கராத்தே) தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் தலைமை ஆசிரியர் திருமுருகன் (பொறுப்பு) பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.இதில் தற்காப்பு கலை (கராத்தே) பயிற்சியாளர் ராஜா 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பலவித பயிற்சிகளை செய்து காட்டினர். இதில் உதவி தலைமையாசிரியர் முருகையன், ஆசிரியர் வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர் னிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.