×

வேளாண் அதிகாரி அறிவுறுத்தல் குடி மனைபட்டா கேட்டு 8 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், நவ. 27: குடி மனை பட்டா வழங்க கோரி திருவாரூர் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூரில் நேற்று தாலுக்கா அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோயில் நிலங்களில் பட்டா வழங்குவதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் , அரசு புறம்போக்கு இடங்களில் நீண்டகாலமாக இருந்து வருபவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண்டும், கஜா புயலால் பாதிக்கப்பட்டு ஓராண்டை கடந்த நிலையிலும் நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கிட வேண்டும் மற்றும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று தாலுகா அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் இடும்பையன் , நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் சாமியப்பன், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தாசில்தார் நக்கீரனிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்தனர். இதேபோல் குடவாசலில் ஒன்றிய செயலாளர் லட்சுமி தலைமையிலும், நன்னிலத்தில் ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் தலைமையிலும் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 தாலுகா அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி: கோயில் நிலங்கள், புறம் போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிடகோரி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமாரராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் திருஞானம், சண்முகவேல், மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.முடிவில் கோரிக்கை மனுக்களை நகர செயலாளர் ஆறுமுகம் தலைமையில் அக்கட்சியினர் மன்னார்குடி தாசில்தார் கார்த்திக், தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில் ஆகியோரிடம் வழங்கினர்.கூத்தாநல்லூர்:கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மன்னை ஒன்றிய செயலாளர் திருஞானம் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாவட்டக்குழு உறுப்பினர் தம்புசாமி ஆகியோர் பேசினார்.முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் நூர்முகமது தலைமையில் அக்கட்சியினர் கூத்தாநல்லூர் தாசில்தார் மலர்கொடியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.நீடாமங்கலம்: நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.கட்சியின் மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்டசெயற்குழு கலியபெருமாள்,கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமாண பெண்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் அரசு ஆணை 318ஐ நிறை வேற்ற கோரியும், கோயில்,மடம், அறக்கட்டளை,வக்போர்டு ஆகிய 18 வகையான புறம்போக்கு இடங்களில் குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பிறகு பட்டாபெறுவதற்கான மனுக்களை தாலுக்கா அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள்காரல்மார்க்ஸ், கதிரேசன், பாலசுப்பிரமணியன் முன்னிலைவகித்தனர்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, முருகானந்தம், தமிழ்மணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன், ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய, நகர கிளை செயலாளர்கள்உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1000 மனுக்கள் தாசில்தாரிடம் கொடுக்கப்பட்டது.முன்னதாக வேதை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்றனர்.திருத்துறைப்பூண்டிதாலுகா அலுவலகம் முன்பு தமிழ் மாநிலவிவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் குடிமனைபட்டா கேட்டு திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்கஒன்றியதலைவர் ஜவஹர், ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நகரதலைவர் பக்கிரிசாமி, நகர செயலாளர் வாசுதேவன் தலைமைவகித்தனர். முன்னாள்எம்எல்ஏஉலகநாதன், இந்தியகம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட துணைச் செயலாளர்கள்ஞானமோகன், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Communist Party of India (Marxist) ,places ,demonstration ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்