தில்லைவிளாகம் அரசு பள்ளியில் ரத்ததான முகாம்

முத்துப்பேட்டை, நவ.27: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார துறை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சுகாதாரதுறை சார்பில் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.இதில் வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன், சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் பழனியப்பன், சுகாதாரதுறை ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் சுகாதாரதுறை அலுவலர்கள், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Tags : Raththana Camp ,Dhillivilagam Government School ,
× RELATED எல்லை பிரச்னையால் விடுபட்டு போன 500மீ...