×

194 பேர் கைது உயர் நீதிமன்ற உத்தரவு வரும் வரை தேவிநகரில் புதிய செல்போன் டவர் அமைக்கக்கூடாது

திருவாரூர், நவ. 27: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வரும் வரையில் திருவாரூர் தேவி நகரில் புதிய செல்போன் டவர் அமைக்ககூடாது என ஆர்டிஓ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தேவி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு வசித்து வரும் மருத்துவர் ஒருவர் மூலம் அவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் டவர் ஒன்று அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு செல்போன் டவர் அமைக்கும் பட்சத்தில் அருகில் வசித்து வருபவர்களுக்கு உடல்ரீதியாக பாதிப்பு மட்டுமின்றி புயல் காலங்களில் செல்போன் டவர் சாயும் பட்சத்தில் அதன் மூலம் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால் இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூலம் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தற்போது அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் துவங்கி உள்ளதால் இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மூலம் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து இருதரப்பிலும் அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ ஜெயபிரிதா தலைமையில் நடைபெற்றது. இதில் செல்போன் கோபுரம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே அதன் தீர்ப்பு வரும் வரையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கூடாது என தெரிவித்தார். இதற்கு இரு தரப்பிலும் ஒத்துக் கொள்ளப்பட்டது.


Tags : Udaipur ,
× RELATED இந்தியாவின் உதய்பூர் நகரில் பழங்கால கார்கள் காட்சிக்கு வைப்பு!!