×

நீடாமங்கலம் அருகே சாலை இருபுறமும் மண்டி கிடக்கும் செடிகளை அகற்றும் பணி துவக்கம்

நீடாமங்கலம்,நவ.27: நீடாமங்கலம் அருகே சாலை இருபுறங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தில் செடிகள் அகற்றும் பணி துவங்கியது.நீடாமங்கலம் அருகில் கானூர் பாசன மதகிலிருந்து தண்டாலம் பாலம் வரை கோரையாறு தென்கரை சாலையில் இரு புறங்களிலும் உள்ள செடிகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என கடந்த 2 மாதத்திற்கு முன் மேலாளவந்தசேரி, ழாளவந்தசேரி,தேவங்குடி, சமுதாய கரை மக்கள் சாலை மறியல் செய்வது என துண்டு பிரசுரம் வெளியிட்டு சாலை மறியலுக்கான ஆயத்த பணியில் ஈடுபட்டனர். அப்போது நீடாமங்கலம் தாசில்தார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்திற்குள் சாலை சீரமைக்கப்படும் அதற்கான நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளையிலிருந்து சாலையில் இரு புறங்களிலும் உள்ள செடிகள் அகற்றப்படும் என பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டதால் தற்காலிகமாக சாலை மறியல் ஒத்தி வைக்கப்ட்டது. பேச்சுவார்த்தையில் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த பேச்சு வார்த்தையில் மறுநாளே சாலையில் இருபுறங்களிலும் உள்ள செடிகளை பொக்லைன் இயந்திரம் அல்லது 100 நாள்வேலை மூலம் அகற்றப்படும் என முடிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே விரைவில் சாலையில் இருபுறங்களிலும் உள்ள செடிகளை அகற்றி சாலை பணியை தொடங்காவிட்டால் சாலை மறியல் நடைபெறும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த செய்தி நேற்று முன்தினம் (15ம் தேதி) தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியால் கானூர் பாசன மதகிலிருந்து கோரையாறு தென்கரை சாலையில் இரு புறங்களிலும் 100 நாள்வேலை திட்டத்தில் செடிகளை அகற்றும்பணி தொடங்கியது. செய்தியை படத்துடன் வெளிட்ட தினகரன் நாளிதழுக்கும்,நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் பணியை பாதியில் நிறுத்தி விடாமல் தண்ணடாலம் பாலம் வரை செடிகளை அகற்ற வேண்டும் என்றனர்.

Tags : plants ,Needamangalam ,road ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...