×

பைக் மோதி சிறுமிகள் 2 பேர் படுகாயம்

திருக்காட்டுப்பள்ளி, நவ. 27: கல்லணை அருகே வீட்டின் முன்பாக விளையாடி கொண்டிருந்தபோது பைக் மோதி 2 சிறுமிகள் படுகாயமடைந்தனர்.கல்லணை அருகே சுக்காம்பார் புதுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன்(43). இவரது பெண் குழந்தைகள் லோகேஸ்வரி (9) மற்றும் ஜெகதீஸ்வரி (6) ஆகியோர் நேற்று முன்தினம் (25ம் தேதி) வீட்டின் முன்பாக விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ரோட்டில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத பைக், 2 பேர் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.கும்பாபிஷேக தேதி அறிவிக்கவில்லைபெரிய கோயில் கும்பாபிஷேகத்திற்கான தேதி அறிவிக்கவில்லை. வரும் பிப்ரவரி மாதத்தில் நடத்த சிவாச்சாரியார்கள் 3 தேதிகளை குறிப்பிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மூலம் முதல்வருக்கு பரிந்துரை அனுப்பி பல மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்னும் தேதி உறுதி செய்யவில்லை. பெரியகோயிலை பொறுத்தவரை யார் இக்கோயில் குறித்த முக்கிய முடிவுகள் எடுத்தாலும் அல்லது அத்தகைய முக்கிய நபர்கள் கோயில் உள்ளே வந்தாலும் அவர்களுக்கு பெரிய இடைஞ்சல் ஏற்படும் என நீண்ட காலமாக நம்பப்பட்டு வருகிறது. இதனால் முக்கிய பிரமுகர்கள், அரசியல் புள்ளிகள் இக்கோயிலுக்குள் வர தயங்குவது தொடர்கிறது. எனவே பெரிய கோயில் கும்பாபிஷேக தேதியை உறுதி செய்து யார் முடிவெடுத்து அறிவிப்பது என்ற அச்சம் உயர்மட்டத்தில் நிலவி வருவதால் இதுவரை தேதி அறிவிப்பு தள்ளிப்போவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரிய கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 5ம் தேதி என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது பக்தர்கள், மக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. உடனடியாக தேதியை இறுதி செய்து அரசு அறிவித்து குழப்பத்தை தீர்க்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.இன்று நடைபெறும் பயிலரங்கில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் வாழ்த்தி பேசுகிறார். “அரசியல் பொருளாதாரம்” என்ற தலைப்பில் ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார்,“அரசியல் அமைப்பு நிலை கடமை” என்ற தலைப்பில் திருப்பூர் ரவிஆகியோர் வகுப்பு எடுக்கின்றனர்.

Tags : girls ,bike collision ,
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்