இந்திய கம்யூனிஸ்ட் இடைக்குழுக்களின் கிளை செயலாளர்களுக்கு பயிற்சி முகாம்

தஞ்சை நவ. 27: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தஞ்சை மாநகரம், தஞ்சை, பூதலூர், அம்மாபேட்டை, திருவையாறு இடைக்குழுக்களின் கிளை செயலாளர்கள் மற்றும் இடைநிலைக்குழு உறுப்பினர்களுக்கான 2 நாள் தொடர் பயிற்சி முகாம் தஞ்சையி–்ல் நேற்று தொடங்கியது.மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பயிற்சி முகாமை மாவட்ட செயலாளர் பாரதி துவக்கி வைத்து தற்போதைய அரசியல் நிலைகள் குறித்து உரையாற்றினார். “மார்க்சியம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மோகனும், “கட்சி வரலாறு மற்றும் திட்டம்” குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் திண்டுக்கல் சந்தானமும் வகுப்பு எடுத்தனர்.

மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், இடைக்குழு செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் பங்கேற்றனர்.இன்று நடைபெறும் பயிலரங்கில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் வாழ்த்தி பேசுகிறார். “அரசியல் பொருளாதாரம்” என்ற தலைப்பில் ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார், “அரசியல் அமைப்பு நிலை கடமை” என்ற தலைப்பில் திருப்பூர் ரவி ஆகியோர் வகுப்பு எடுக்கின்றனர். இன்று மாலை நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம் பங்கேற்று பயிற்சி முகாமை நிறைவு செய்கிறார்.

Related Stories:

>