×

3 ஆண்டுகளாக வழங்கவில்லை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடைகளை வழங்க வேண்டும்

கும்பகோணம், நவ. 27: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள சீருடைகளை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க ஏஐடியூசி கோரிக்கை மனு அளித்தது.கும்பகோணம் மண்டல பொது மேலாளர் ஜெபராஜ் நவமணியிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க ஏஐடியூசி பொது செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் கடந்த 3 ஆண்டுகளாக சீருடை வழங்கவில்லை. 2 ஆண்டுகளாக தையல் கூலி வழங்கவில்லை. மேலும் 3 ஆண்டுகளாக பாஸ், காலணி வழங்கவில்லை. அனைத்து கிளைகளிலும் தேவையான டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தேவையான தரமான உதிரிபாகங்கள் தடையின்றி வழங்க வேண்டும்.

அனைத்து கிளைகளிலும் உணவகம் சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான உணவு வழங்க வேண்டும். கழிவறை, குளியலறை, ஓய்வறைகளை தினசரி சுத்தம் செய்து சுகாதாரமாக வைக்க வேண்டும்.நடைமுறையில் 2 நாள் விடுப்பு என்பதை 4 நாட்கள் என அனைவரும் எடுத்து கொள்ள அனுமதியளிக்க வேண்டும். சிறு தவறுகளுக்கு பெரிய தண்டனை அளிக்கும் முடிவை கைவிட வேண்டும்.உள்துறை விசாரணை என்பதை அவசியமான நிகழ்வுகளுக்கு மட்டும் நடத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு 2019ல் 6 மாதம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : transport workers ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்