×

மல்லிகை சீசன் முடிந்தது முல்லை அரும்பு பூ விலை கிடுகிடு உயர்வு

கும்கோணம், நவ. 27: மல்லிகை பூவின் சீசன் முடிந்ததால் முல்லை அரும்பு பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுந்தரபெருமாள்கோயில், சுவாமிமலை, அலவந்திபுரம், பட்டீஸ்வரம், கோபிநாதபெருமாள்கோல், தேனாம்படுகை, உடையாளூர், உமையாள்புரம், உத்தாணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மல்லிகை, முல்லை அரும்பு, ரோஜா போன்ற பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது தஞ்சை மாவட்ட பகுதிகளில் மல்லிகை பூக்களி–்ன் சீசன் குறைந்தது. இதையடுத்து திருச்சி, திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து கும்பகோணம் பூ மார்க்கெட்டிற்கு முல்லை அரும்பு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் முல்லை அரும்பு பூவின் விலை கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று கும்பகோணம் பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் கோயில் விழாக்கள் அதிளவில நடைபெறும். இதற்காக பக்தர்கள் முல்லை அரும்பு பூவை வாங்கி செல்வதால் கிலோ ரூ.1000 வரை விலை உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.தற்போது தஞ்சை மாவட்ட பகுதிகளில் மல்லிகை பூக்களி–்ன் சீசன் குறைந்தது. இதையடுத்து திருச்சி, திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து கும்பகோணம் பூ மார்க்கெட்டிற்கு முல்லை அரும்பு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.


Tags : season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு