×

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 110 பேர் கைது

தஞ்சை, நவ. 27: காலமுறை ஊதியம், ஓய்வூதியம் கேட்டு தஞ்சையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 110 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.காலமுறை ஊதியம், ஓய்வூதியம் கேட்டு தஞ்சை ரயில் நிலையம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.போராட்டத்தில் 25 குழந்தைகளுக்கு குறைவான சத்துணவு மையம் மூடப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது. ஒரே பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மையத்தை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். காலியாக உள்ள சத்துணவு மையங்களுக்கு பணி நியமனம் வழங்காமல் காலம்தாழ்த்துவதை கைவிட்டு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சமையல் எரிவாயு செலவை அரசே ஏற்க வேண்டும். உணவு செலவு மானியம் ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 95 பெண்கள் உட்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...