மரம் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு திருச்செந்தூர் மற்றும் உடன்குடி பகுதியில்

கடந்த சில நாட்களாக பகல், இரவு என மாறி மாறி தீவிரமாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆவுடையார்குளம் மறுகால் பாயும் நிலையில் உள்ளது. எல்லப்பநாயக்கன்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த தொடர் மழையால் திருச்செந்தூர் வட்டார பகுதியில் விவசாய பணிகள் சுறுசுறுப்பாக நடந்துவருகிறது.  இந்நிலையில்  நேற்று காலை திடீரென திருச்செந்தூரில் கனமழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கனமழையால் திருச்செந்தூர்-பாளை மெயின்ரோட்டில் குமாரபுரத்திற்கு அடுத்தபடியாக டிஎஸ்பி அலுவலகம் அருகில் பழமையான மரம் ரோட்டின் குறுக்கே சரிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் தீயணைப்பு மீட்பு படை அலுவலர் நட்டார்ஆனந்தி தலைமையில் மீட்பு படையினர் விரைந்து சென்று ரோட்டில் குறுக்கே விழுந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார்

ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>