தலைஞாயிறில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

வேதாரண்யம், நவ.27: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் மணிஎழிலன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மகாகுமார் பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏக்கள் மீனாட்சிசுந்தரம், காமராஜ் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற தீவிரமாக பாடுபடுவது, ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையுடன் பணியாற்றி செயல்பட வேண்டும். மாநகராட்சி மேயர் நகராட்சி தலைவர் பேரூராட்சி மறைமுகமாக தேர்ந்தெடுக்காமல் ஜனநாயக முறைப்படி மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும். யூரியா தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. பொதுக்குழு உறுப்பினர் வீரசேகரன் நன்றி கூறினார்.

Related Stories:

>