×

மணல் கடத்திய லாரி டிரைவர் கைது

புதுக்கோட்டை, நவ.27: மணல் கடத்திய லாரி டிரைவரை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்தனர்.  புதுக்கோட்டை எஸ்.ஐ. முத்துராஜா மற்றும் போலீசார் தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை சோதனை நடத்தியதில் 5 யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் வைகுண்டம் அருகே மீனாட்சிப்பட்டி கோவிந்தசாமி மகன் வெற்றிவேல்(29) என்பவரை கைது செய்தனர். மணலுடன் டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : truck driver ,
× RELATED லாரி டிரைவர் மாயம்